திருமலையில் களமிறங்குமா அமெரிக்கா?

திருமலையில் களமிறங்குமா அமெரிக்கா?

இலங்கையின் இயற்கை துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகும் செய்தியை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

அவ்வாறான எந்தவொரு திட்டமும் இல்லையென அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் – திருகோணமலை துறைமுகத்தை அண்மித்த 33,000 ஏக்கர் நிலப்பரப்பை முதலீடுக்காக அமெரிக்க நிறுவமொன்றுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இந்தச் செய்தியை முற்றாக நிராகரித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும், அவ்வாறான எந்தவொரு வேலைத்திட்டமும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை துறைமுகம், எண்ணெய் தாங்கிகள் மற்றும் 33000 ஏக்கர் நிலத்தை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு கொடுப்பதற்காக அரசாங்கம் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்த சமரசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.

எம்.சி.சி உடன்படிக்கை ஊடாக உருவாக்கப்பட்ட அமெரிக்க வழிப்பாதையை திருகோணமலை துறைமுகத்தின் ஊடாக கெரவலப்பிட்டி, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்கள் வரை செல்ல தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *