திருவள்ளுவரை பெருமைப்படுத்திய அமெரிக்கா!

திருவள்ளுவரை பெருமைப்படுத்திய அமெரிக்கா!

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், சாலைகளுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் திருவள்ளுவரின் சிறப்பு என்பது தேசங்களை கடந்து பரவி இருக்கிறது என்பதற்கு சான்றாக, தற்போது அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு சாலைக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் பகுதியில் இந்த சாலை அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் ‘Valluvar Way’ என்றும் தமிழில் ‘வள்ளுவர் தெரு’ என்றும் இந்த சாலை அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை விர்ஜினியா சபை பிரதிநிதி டான் ஹெல்மர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *