துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர். அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்ற முதல் பெண்மணி. முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய அமெரிக்கர் ஆகிய சிறப்புகளை பெற்றார்.இந்தநிலையில் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்த நர்சை போலீசார் கைது செய்துள்ளனர்.புளோரிடாவை சேர்ந்த நர்சு நிவியன் பெட்டிட் (வயது 39). இவர் 2001-ம் ஆண்டில் இருந்து ஜாக்ச் ஹெல்த் திட்டத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் சிறையில் உள்ள தனது கணவருக்கு ஜிபே மூலம் வீடியோக்களை அனுப்பி உள்ளார். சிறையில் உள்ள கைதிகளை அவரது குடும்பத்தினருடன் இணைத்து ஜிபே என்ற கணினி பயன்பாடு மூலம் வீடியோக்களை அனுப்ப அனுமதிக்கப்படுகிறது.நிவியன் பெட்டிட் பெல்ப்ஸ் கலைஞருக்கு அனுப்பிய வீடியோவில் துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டில் கூறி இருப்பதாவது:-

பிப்ரவரி 13-ந் தேதி முதல் பிப்ரவரி 18-ந் தேதி வரை நிபியன் பெட்டிட் அனுப்பிய வீடியோவில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மீது கொலை மற்றும் உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதாக தெரிந்தே மற்றும் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்தார்.அதிபர் ஜோபைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோரின் மீதான வெறுப்பை பற்றி பேசுகிறார். மேலும் கமலா ஹாரிசை கொல்வது பற்றியும் பேசி உள்ளார்.

ஒரு வீடியோவில் கமலா ஹாரிஸ் நீங்கள்இறக்க போகிறீர்கள். உங்கள் நாட்கள ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டன.பிப்ரவரி 18-ந் தேதி அனுப்பப்படும் என்றும் மற்றொரு வீடியோவில், நான் துப்பாக்கி வாங்க செல்கிறேன். நான் கடவுளிடம் சத்தியம் செய்கிறேன். இன்றிலிருந்து 50 நாட்களில் நீங்கள் (கமலா ஹாரிஸ்) இறக்கப் போகிறீர்கள். இந்த நாளை குறித்துவைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.இதுதொடர்பாக அமெரிக்க ரகசிய சேனல் விசாரணை நடத்தி வந்தது. நர்சு நிவியன் பெட்டிடின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *