கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு இலங்கையில் பொருளாதார வளர்ச்சியின் திருப்புமுனை எனவும் அதன் ஊடாக நாடு சீனாவின் காலனித்துவமாக மாறாதெனவும் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவின் கருத்து தொடர்பில் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை சட்டத்தின் கீழ் போர்ட் சிட்டி நிர்வகிக்கப்படும் எனவும் அதன் வழக்குகள் இலங்கை நீதிமன்றில் விசாரிக்கப்படும் எனவும் விசா தொடர்பில் இலங்கை சட்டம் செயற்படுத்தப்படும் எனவும் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.கொள்வனவு செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப்படுவதுடன் வௌிநாட்டு பணங்கள் புழக்கத்தில் இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.