கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை ஒரு நாள் கூட தாமதிக்க முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக்க திஸ்ஸகுட்டியராச்சி தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலத்தை கொண்டு வந்து துறைமுக நகரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பதே பிரதான விடயம். ஏன் இதனை தாமதிக்க வேண்டும்?
எமது நாட்டில் கொரோனா நிலைமையை ஓரளவுக்கேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொருளாாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் இரண்டு திருப்புமுனைகள் பற்றி அண்மை காலத்தில் பேசியதை நாம் நினைவுப்படுத்த வேண்டும்.இந்த கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு திட்டத்தின் ஊடாக இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்று மாறுவதை நிறுத்த முடியாது எனவும் திஸ்ஸகுட்டியராச்சி குறிப்பிட்டுள்ளார்.