நீருக்காக தெற்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக Harvard சர்வதேச கல்வி நிறுவனம் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளது.போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ் மற்றும் கலாநிதி அன்டோனியா லுஷிகிவிக்ஸ் ஆகியோரினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த செயன்முறை சீனாவின் ‘அச்சுறுத்தி நீரைப் பறிக்கும் பொறிமுறை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கம்போடியா, வியட்னாம், லாவோஸ், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போதும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், இந்தியாவும் படிப்படியாக அந்தப் பொறிக்குள் சிக்கி வருகிறது.சிங்கராஜ வனத்திலிருந்து ஊற்றெடுக்கும் பிரதான மூன்று கங்கைகளை மறித்து இரண்டு நீர்த்தேக்கங்களை அமைப்பதன் மூலம் சீனா சுத்தமான குடிநீரை தமது காட்டுப்பாட்டிற்குள் வைத்தருக்க முயற்சிக்கின்றதா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.