தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவராக டி கொக் நியமனம்!

2020-21ஆம் ஆண்டுக்கான தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

கிரிக்கெட் இயக்குனர் கிரேம் ஸ்மித்தின் முன்னைய நிலைப்பாட்டின் வெளிப்பாடாக இந்த நியமனம் அமைந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்காவில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளநிலையில், இத்தொடரில் விளையாடும் தென்னாபிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில், சரேல் எர்வி, க்ளெண்டன் ஸ்டூர்மன் மற்றும் கைல் வெர்ரெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளதன் மூலம் டெஸ்ட் அறிமுகத்தை பெறுகின்றனர்.

அத்துடன் உபாதையில் இருந்து மீண்டுள்ள வயான் முல்டர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். காகிசோ ரபாடா மற்றும் டுவைன் பிரிட்டோரியஸ் அணியில் பெயரிடப்படவில்லை

ஆனால் காயங்களிலிருந்து அவர்கள் மீள்வது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால் வரும் நாட்களில் அணியில் சேர்க்கப்படலாம்.
அணியின் முழுமையான விபரத்தை தற்போது பார்க்கலாம்,

குயின்டன் டி கொக் தலைமையிலான அணியில், டெம்பா பவுமா, ஹெய்டன் மார்க்ரம், ஃபாஃப் டு பிளெசிஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், டீன் எல்கர், கேசவ் மகாராஜ், லுங்கி ங்கிடி, ரஸ்ஸி வான் டெர் டசென், சரேல் எர்வி, அன்ரிச் நோர்ட்ஜே, க்ளெண்டன் ஸ்டூர்மன், வயான் முல்டர், கீகன் பீட்டர்சன், கைல் வெர்ரெய்ன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி சென்சூரியனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி ஜோகனஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *