தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் அல்லது முகவரி மாற்றம் தேவையென்றால் மாத்திரம் பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை உள்ளடக்குவது அல்லது அதற்குரிய திருத்தங்களை கிராம உத்தியோகத்தரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கோவிட் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு 2022 வாக்காளர் பட்டியலுக்குரிய படிவங்கள் இம்முறை வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தங்களின் அடிப்படையில் மட்டுமே 2022 வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதால் 2021 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாவிட்டாலோ அல்லது முகவரியை மாற்ற விரும்பினாலோ மட்டுமே கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் கடந்த 1ஆம் திகதி தொடங்கியது. இப்பணியை ஜூன் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *