கொரோனா தொற்றால் தினமும் இறக்கும் நபர்களின் எண்ணிக்கை நூறை தாண்டக் கூடும் என விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் விசேட மருத்துவ நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகர்ப்புக்கு ஏற்ப இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க கூடும். இதனால், குறைந்த 14 நாட்களுக்காவது கடும் பயண கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.இவ்வாறு அமுல்படுத்தப்படும் பயண கட்டுப்பாடுகள் இடைநடுவில் இரத்துச் செய்யப்படக் கூடாது. ஏற்பட போகும் ஆபத்தான நிலைமையில் இருந்து தப்பிப்பதற்கான ஒரே சந்தர்ப்பம் உடனடியாக கடும் பயண கட்டுப்பாடுகளை விதிப்பதாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.