தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை

தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபா இழப்பீடு – இலங்கை போக்குவரத்து சபை

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பேரூந்து கட்டணத்திலிருந்து ஒரு ரூபா கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்துக்கு ஒதுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் கொரோனா தொற்றுடையவராக அடையாளங் காணப்படும் நபரொருவருக்கு இழப்பீடாக 10,000 ரூபாவும் தொற்றின் மூலம் மரணமடைந்தால் இழப்பீடாக 50,000 ரூபாவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *