குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றில் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் பலர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அவர்களது நடவடிக்கைகள் மற்றும் அறிக்கைகள் அவ்விடத்தில் முந்தைய நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணானவை என்பதைக் குறிப்பிடுகின்றன.
வடமாகாண சபை உறுப்பினர் முன்னாள் துரைராசா ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் த.தே.கூட்டமைப்பு பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை சந்தித்த பின் இந்த சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர்.
மேலும் பெருமளவு இந்து வணக்கஸ்தலங்கள் அழிக்கப் பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் ஏற்கனவே முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.