ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒரு வருட ஆட்சிக்காலம் தோல்வி என சிலர் கூறினாலும் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பௌத்த நிலைப்பாடே தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு தனி சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. இதற்காக மிகப் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். எனினும் இந்த நிலைப்பாட்டின் தோல்வி ஒரு வருடத்திற்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளது என்றார்.