லோஃப்வென் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் (Stefan Lofven) பதவி விலகியுள்ளார். அத்துடன், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் சுவீடன் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லோஃவென், 2018ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமராக தெரிவாகியிருந்தார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் லோஃவென் தோல்வி அடைந்ததை அடுத்து, தேர்தலுக்கு செல்வது அல்லது பதவி விலகுவது ஆகிய ஏதேனும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார். கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு உள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது நாட்டுக்கு சரியாக இருக்காது என்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக லோஃவென் அறிவித்துள்ளார்.