நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது- பிள்ளையான்

நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது- பிள்ளையான்

கடந்த நல்லாட்சி அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தது என ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து விடுதலையாகியுள்ள பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தைபிறந்தால் வழிபிறக்கும் அந்த  அடிப்படையிலும்
என்னுடைய வாழ்கையிலும் எமது கட்சிக்கும் இன்று நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 ம்திகதி கொழும்பிலே சிஜடியின் இடத்துக்கு செல்லுகின்றபோது ஊடகங்களுக்கு சொன்னேன் நல்லாட்சி அரசாங்கம் என்னை பழிவாங்க நினைக்கின்றது யாருக்கோ எல்லாம் பாவிக்க முடியாத சட்டத்தை அப்பாவியாக அரசியல் செய்து கொண்டிருக்கின்ற எனக்கு பாவிக்க முனைகின்றது என தெரிவித்தேன்

ஆயிரத்து 869 நாட்கள் (1869) சிறைச்சாலையிலே வாடினேன் சிறைச்சாலை என்பது உணவில் இருந்து படுக்கையில் இருந்து மழை பெய்தால் குளிர், போன்ற சொல்லமுடியாத துன்பங்கள் சிறைச்சாலையில் இருக்கின்றது. அப்படியெல்லாம் என்னை அடைத்து நசுக்கினர்.

காரணம் 2015 ஆண்டு வந்த நல்லாட்சி நூறுவீதம் தங்களோடுவந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கொடுத்த பரிசாக இதைச் செய்தார்கள.; அவர்களுக்கு முட்;கொடுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க சிறிசேன அவருடைய கையொப்பத்தையிட்டதன் காரணமாக நான் வாடினேன்.

ஆனால் அடிக்கடி சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது என்னைவரலாறு விடுதலை செய்யும் என தெரிவித்தேன் எனக்கு நம்பிக்கையிருந்தது இந்த வழக்கில் எனக்கு எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. ஜோசப்பரராஜசிங்கத்தை நான் கண்டதே இல்லை. அவருக்கு வாக்களித்ததும் இல்லை அவர் அருகில் பார்த்ததும் இல்லை.
அவருடன் அரசியல் ரீதியான எந்தவிரோதமும் எனக்கு இல்லை. அவர் மரணிக்கும்போது 2005ம் ஆண்டு அப்போது நான் அரசியில் இருக்கவில்லை அரசியல் செய்யவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. அரசியலுக்காக எந்தவிதமான முயற்சியும் எடுத்து மனிதனும் நான் இல்லை. 2008 ம் ஆண்டு தான் முதல்முதலாக மாகாணசபை தேர்தலில் நான் போட்டிபோட்டேன் அந்த நேரத்தில்தான் நான் முதலாவது வாக்கைச் செலுத்தினேன்.

ஆனால் அந்தநேரத்தில் முதலமைச்சராக வரவேண்டும் என முன்னாள் அரசாங்க அதிபர் மௌனகுருசாமியை நிறுத்துவது அல்லது எமது கட்சிதலைவர் மறைந்த ரகுவை முதலமைச்சராக நியமிப்பது என்ற அடிப்படையில் தான் நான் தேர்தலிலே போட்டியிட்டேன். இருந்தாலும் காலசூழல் என்னை முதலமைச்சராக்கியது.

எனவே அக்கிரமம் செய்து அரசியலுக்காக வரவேண்டிய தேவைப்பாடு இருக்கவில்லை. இருந்தாலும் தமிழ் தேசியவாதிகள் என்று நடிக்கின்ற பொய்யான மக்களை உசுப்பேற்றுகின்ற வேடதாரக்கூட்டம் என்னை கிழக்கிலே வளரவைத்தால் அவர்களின் அரசியல் முடிந்துவிடும் அல்லது யாழ்ப்பாணத்திலே இருந்து வந்து இங்கு தேர்தல் கேட்க முடியாது என்ற உறுதியாக நம்பியவர்கள். இந்த பயங்கரவாத சட்டத்தை இயற்றுவதற்கு உறுதுணையாக இருந்த பிதாமக்கள் அவர்களுடைய வாரிசுகளாக இருக்கின்றவர்களை நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கி அதனுடாக என்னை அடைப்பதற்கு முயற்சி செய்து அடைத்தனர்.

நான் நீதிதுறையை நம்பி பலமுறை வாதாடினேன் என்னை கைது செய்த காலத்தில் மாகாணசபை உறுப்பினராக இருந்தேன் ஒரு மாகாணசபை ஊறப்பினரை அடைப்பது என்பது அந்த மக்களின் குரல்வளையை நசுக்குவதற்கு சமன். இதை நீதிபதி தீர்ப்பிலே எழுதியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே 2005,6,7, ஆண்டு பகுதிகளிலே எத்தனை கொலைகள் இடம்பெற்றது. ஜோசப்பரராயசிங்கம் என்ற அந்த மனிதர் 2005 தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால் வெற்றி பெற்றவர்களை விடுதலைப் புலிகள் சுட்டு கொலை செய்துவிட்டு அவர்களுக்கு வேண்டியவர்களை நியமித்தார்கள்.

ராஜன்சத்தியமூர்த்தி, கிங்சிலிராசநாயகம் கொல்லப்பட்டனர். அதேபோல கல்கலைகழ விரிவுரையாளர்கள் கொல்லப்பட்டனர். இதனை யாருமே கதைப்பதில்லை கேட்பதில்லை. ஆனாலும் மானிப்பாயில்  அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாரிசுகள் என்ற அடிப்படையில் முன்நிறுத்தியுள்ளனர்.

நள்ளிரவில் ஆராதனையில் கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டீர்கள். இப்போது இருக்கின்ற ஆண்டகைதான் அப்போது இருந்திருப்பார் அவாரே மற்றும் ஆராதனையில் ஈடுபட்ட எவரும் என்னை கண்டார்களா? அல்லது நான் சொன்னதாக உறுதியாக சொன்னார்களா? எந்தவிதமான கண்ட, தொழில்நுட்ப, சாட்சிகள் இல்லாமல் என்னை அடைத்தார்கள்.

ஆனாலும் அரசியல் காட்புணர்சி கொண்டவர்கள் தங்களுடைய அரசியலுக்காகவும் ஊடகங்களின் வளர்ச்சிக்காக எங்களுடைய கைதுகளைப் பயன்படுத்தினர்களே தவிர நாங்கள் அடிபட்டு குரல்வளை நசுக்குப்பட்டு எங்கள் குடும்பங்களும் கட்சி தொண்டர்களும் வீதிகளில் கண்ணீர்விட்டு திரிந்தபோது எந்த ஊடகமும் எங்களுக்கு உதவி செய்யவில்லை.

எனது தம்பியின் மனைவி அடிக்கப்பட்டு சிஜடி யினரால் ஓதுக்கப்பட்டபோது எந்த பெண்ணியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை. எவ்வளவே அநியாயங்களை நல்லாட்சி அரசாங்கம் நடத்திகாட்டியது யாரும் கண்டுகொள்ளவில்லை. இன்று ஊடக தர்மம், சமதர்மம், சட்டம், பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதிகளை தடுத்துவைக்க கூடாது என குரல் கொடுத்தனர். ஆளால் பயங்கரவாத தடைச்சட்டத்தில் என்னை தண்டிக்க வேண்டும் என இரட்டை முகத்தைக் காட்டுகின்றனர்.

நான் ஓரு போராட்ட அமைப்பில் சோந்து போராடியது குற்றமா, அல்லது இன்று நசுக்கப்பட்டிருக்கின்ற ஏழை எளிய மக்களுக்கு பணி செய்வது குற்றமா?

நீங்கள் எங்களை அகற்றிவிட்டு நீங்கள் அந்த இடத்தை தக்கவைப்பதற்கு கைக்கூலிகளை கொன்றுவிட்டு வேலை செய்வதற்கான திட்டங்களை வகுக்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு தோற்றுப்போய் இருக்கின்ற அசிங்க நிலமையை யாழ்ப்பாணத்தில் பார்க்கமுடியும் .

நான் குற்றமற்றவன் வரலாறு என்னை விடுதலை செய்யும் எந்தவிதமான களங்கமற்றவன் நீதித்துறைக்கும் சட்டத்தரணி அணில் சில்வாக்கும் அவருடைய குழாமிற்கும் நன்றிகள்,

பலவேதனையான சம்பவங்களும் நீதிதுறையில் இடம்பெற்றது 3 வருடங்களுக்கு முன்னர் நீதிமன்றில் பிணை கேட்டிருந்தேன் அது மறுக்கப்பட்டது சுமத்திரன் மற்றும் முன்னாள் வெளிநாட்டு அமைச்சராக இருந்த மங்களசமரவீர போன்றோர் தலையீடு செய்தார்கள்

நல்லாட்சி அரசாங்கம் நீதிதுறையை தனக்கு சார்பாக பயன்படுத்தி மக்களையும் எங்களையும் பழிவாங்கியது என்பதற்கு நான்தான் சாட்சி ஆனால் இன்று எம்.பி ரஞ்சன் ராமநநாயக்கா முழுக்கமுமுக்க நீதித்துறையை கேவலப்படுத்தினார் என உறுதிப்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது

அந்த வழக்குடன் என்னுடைய வழக்கை சம்மந்தப்படுத்தி எதிர்கட்சியினர் பேசுகின்றனர். பயங்கரவாத தடைச்சட்டம் என்றால் என்ன? பிள்ளையான் தண்டிக்கப்பட்டவரா? எதுவும் தெரியாமல் முன்னாள் சுகாதார அமைச்சர் ஆக்களை வெட்டி முதலைக்க போட்டது என தேர்தலுக்காக செய்தது போல் நல்லாட்சி அரசாங்கம் சம்மந்தன். சுமத்திரன் மற்றும் யாழ்ப்பாணத்தார் சிலரை மகிழ்சிப்படுத்துவதற்காக என்னை பயங்கரவாத தடைச்சட்டத்தில் குற்றம் சாட்டி அடைத்தனர்.

ரஞ்சன் ராமநாயக்காவினதும் எனது வழக்கும் சம்மந்தமில்லைதை கதைக்காமல் எங்களை உங்கள் அரசாங்கம் எப்படி பழிவாங்கியது நீதிதுறையை பயன்படுத்தினீர்கள் எத்தனை நீதிபதியுடன் பேசினீர்கள் என்பதை அறிந்து பாருங்கள். ஆனால் இந்த அரசாங்கம் ஜனாதிபதி தன்னுடைய பலத்தைப் பாவித்து விடுதலை செய்தார்கள் என்ற மாயையத் தோற்றுவிக்க முயல்கின்றர்.

நாங்கள் மேன்முறையீடு செய்திருந்தோம் அந்த மேன்முறையீட: தீர்ப்பு 37 பக்கம் கொண்டது இதனை இரு நீதிபதிகள் 2020-11-17 தீர்பளித்தனர் இதில் 7 வழக்கிலே தீர்ப்பளிக்கப்பட்டதை எனது வழக்குடன் ஓப்பிட்டு காட்டியுள்ளார். மேல் நீதிமன்றம் இந்த இரண்டு சாட்சிகளை வைத்து வழக்கு நடத்தமுடியாது அதற்கான ஏதுக்கள் இல்லை என்று வழக்கை நிராகரித்தனை அடிப்படையாக வைத்து மட்டக்களப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

இவற்றையெல்லாம் விளங்கி கொள்ளதா எதிர்கட்சியினர் பிள்ளையான் ஒரு குற்றவாளி ஜனாதிபதியின் அதிகாரத்தில் விடுவித்ததாக ஒரு மாயைத் தோற்றுவிக்கின்றனர். நான் வழக்கு தொடர்பாக ஜனாதிபதியையே பிரதமரையே சந்தித்தில்லை ஏன் எனக்கு தெரியும் இந்த வழக்கை கொண்டு நடத்தமுடியாது என அதேபோல் என்னை கைது செய்த சிஜடி, சாணிஅபயசேகரா, அப்போது இருந்த டிஜஜிக்கு. மைத்திரிபால சிறிசேனவுக்கு கூட தெரியும். இந்த வழக்கு நடத்தமுடியாது என்று

இருந்தாலமு; சிலரின் மனங்களை குளிரவைக்கவேண்டும் மாகாணசபை நடத்த தேவையில்லை அதிகாரங்கள் தேவையில்லை. ஜ.நாடுகள் சபையில் கொண்டுவந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அகற்றக் கூடாது என்றதற்கமைய என்னுடன் சோடிக்கப்பட்டது .முழுக்கமுழுக்க அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டேன் என்னை விடுதலை செய்வதற்காக கட்சி தொண்டர்கள் கணிசமாக உழைத்தார்கள் இவற்றுக்கெல்லாம் முடிவு கிடைத்துள்ளது

சிறைச்சாலையில் 5 வரும் 10 வருடமே அடைத்தாலும் மனங்கலங்கி அரசியல் விடுபட்டு ஓரம்கட்டி ஒதுங்கும் மனிதனல்ல நான். நான் சிறையில் இருந்து கொண்டே 54 ஆயிரம் விருப்பு வாக்கைப் பெற்றவன். வடக்கு கிழக்கிலே எந்த தமிழரும் பெறாத வாக்கை மட்டக்களப்பு மக்கள் அளித்தார்கள். ஏன் இயவ்பாகவே மட்டக்களப்பில் பற்றுள்ளவன் இறுதிவரைக்கும் நிற்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அந்த நம்பிக்கையை மக்களே நான் செய்து காட்டுவேன். என்னுடைய உறுதி தன்மையையும் மட்டக்களப்பு மீது வைத்துள்ள பற்றையும் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு தேவை மாகாணசபை முறமைதான் வேண்டும் என்கின்ற நிலமையை நான் நடாத்திகாட்டுவேன் என்று சித்தம் கொண்டுள்ளேன் உறுதியாக இருக்கின்றேன்.

ஆகையால் சுமத்திரன் போன்றவர்கள் கொழும்பில் இரந்து கொண்டு அல்லது சாணக்கியன் போன்றவர்கள் அங்கும் நின்று இங்கும் நின்று சிறுவயதிலே வெளிநாடு சென்று ஆங்கிலம் கற்று கண்டியில் நின்று படித்து நாங்கள் வரவில்லை மக்களுடன் நின்று 16 வயதிலே பாடசாலையை தூக்கி எறிந்துவிட்டு போராட் இயக்கத்துக்கு சேர்ந்து 2005 பிரபாகரன் எங்களை அடித்து கொல்லும் வரைக்கும் போராடினோம்.

அதற்கு பின் யாழ்பாணிகள் இப்படித்தான் முடிவு எடுப்பார்கள் அவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு எங்களை ரத்தத்தை நனையவிடுவார்கள் என்பதற்காக நாங்கள் இந்த முடிவெடுத்து மண்ணையும் மக்களையும் காக்கப்புறப்பட்ட நாங்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பல தியாகங்கள் அழிவுகளை கண்ட ஒரு கட்சி இருந்தாலும் எங்கள் மக்களுக்கு எந்த ஒரு அடிப்படையில் அநியாயம் செய்யாமல் மக்களை கட்டியனைத்து 10 வருடங்களுக்கு பின்னர் உயர்ந்த வளர்ச்சியடைந்துள்ளோம் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *