நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்..

நள்ளிரவு முதல் அவசரகால விதிமுறைகள்..

அத்தியாவசிய பொருள் விநியோகத்திற்கான அவசர சட்ட விதிமுறைகளை இன்று (30) நள்ளிரவு முதல் அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் 2 ஆம்திகதி சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பதுக்கிவைத்தல், அதிக விலைக்கு விற்றல், உள்ளிட்ட செயற்பாடுகளின் ஊடாக நுகர்வோரை அசௌகரியத்துக்கு உள்ளாகும் சந்தை முறைக்கேடுகளை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரசாங்கத்தின் உறுதிப்பாட்டு விலை அல்லது சுங்கம் இறக்குமதி செய்த விலை என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு, மேற்படி உணவு பொருட்களை கொள்வனவு செய்து மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு அங்கீகாரம்பெற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கும், அரச வங்கிகளின் ஊடாக மொத்தக் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ள கடனை, கடன் பெற்றவரிடம் அறவீடு செய்யக்கூடியவாறும் இது நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *