நவம்பர்  1 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்

நவம்பர் 1 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்

கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான தினம் ஒன்றை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத பலர் சமூகத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படக்கூடிய அவதானம் அதிகம். எனவே, அவர்கள் விரைவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

கொவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த இது பெரும் பங்களிப்பு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும், நவம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக ஜனவரி மாதத்திற்குள் ஒரு மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்க உள்ளன.

அத்துடன், இந்த நாட்களில் மக்கள் சன நெரிசலான இடங்களில் இருப்பதை தவிர்க்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *