நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கை போக்குவரத்துச் சபையை கொண்டு நடத்த நிதி கையிருப்பில் இல்லை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், போக்குவரத்துச் சபையை நடத்துவதற்காக ஆயிரத்து 912 மில்லியன் ரூபாய் திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது. ப
யணக்கட்டுப்பாடுகள், ஊரடங்குச் சட்டம் ஆகியன அமுல்படுத்தப்பட்டிருந்த காலத்தில் சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய பேருந்துகள் இயக்கப்பட்டதால் மாத்திரம் இந்த ஆண்டில் 484 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த காலப் பகுதியில் நாட்டின் சகல வழித்தடங்கலில் நஷ்டம் ஏற்பட்டதாக போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது.