சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.ஆறு காலதாமதமான தீர்வு காணப்படாத கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை அரச மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையில், கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்படவில்லை.எனவே, அனைத்து தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும். MBBS நிபுணர்களின் கருத்துக்களை மாத்திரம் கருத்திற்க் கொண்டு ஏனைய நபர்களை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்தார்.சுகாதார செயலாளர் தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்குவார் என தாங்கள் நம்புவதாகவும் ஆனால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள், மகப்பேறு, குழந்தைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் மற்றும் இரத்த வங்கி என்பன 9 ஆம் திகதி வழமை போல் செயற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.