எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாடுமுழுவதும் வர்த்தக நிலையங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது.பொது சுகாதார பரிசோதகர் சங்கம், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக, அதன் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.இந்த சோதனை நடவடிக்கையில், 3 ஆயிரம் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.