நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் சேவைக்கான கட்டணமாக டொலர்கள் அறவிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கும் போது அறவிடப்படும் தொகையை டொலர்களில் அறவிடுமாறு பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு விசேட உத்தரவை இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ளது.

இதன் ஊடாக நாட்டுக்குள் வரும் டொலர்களை அதிகரிப்பதே  மத்திய வங்கியின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக வணிக வங்கிகள் இறக்குமதி பத்திரங்களை வழங்கும் போது, வங்கிக்கு கிடைக்கும் அந்நிய செலாவணிகளின் விகிதங்களுக்கு நிகராக பணத்தை வழங்குமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையானது நிரந்தர வைப்பு வசதிகளின் வீதத்தையும் நிரந்தர கடன் வசதி வீதத்தையும் தலா இலக்கம் 50 என்ற வகையில் 5.50 வீதமாகவும் 6.50 வீதமாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *