நாட்டில் ஒமிக்ரோன் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ரஞ்ஜித் படுவன்துடாவ எச்சரித்துள்ளார்.
தற்போது வரையில் நாட்டில் ஒமிக்ரோன் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் மூலம் ஒமிக்ரான் வைரசை எதிர்கொள்ளும் திறன் 75 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசிகளை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.