சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது நாட்டை நேசித்து சுவர்களில் சித்திரம் வரைந்த இளைஞர்கள், இன்று நாட்டை விட்டுச் செல்ல தயாராகி வருவதாக என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa ) கவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் வரிசையில் உள்ளார்களா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளைஞர்கள் சித்திரம் வரைவதற்கான செலுவுகளை தாங்களே ஏற்றுக் கொண்டனர். அழைப்பின்றி அவ்விடத்திற்கு வந்தார்கள். சித்திரத்திற்கு கீழே தங்கள் பெயரை கூட அவர்கள் குறிப்பிடவில்லை.
கட்சி அரசியலால் இந்த நாடு களங்கமடைந்துள்ளதாகவும், இந்த அசிங்கமான அரசியலால் நாட்டை களங்கப்படுத்த வேண்டாம் என்பதற்காக இளைஞர்கள் சுவர்களில் ஓவியங்களை வரைந்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அவ்வாறான இளைஞர்கள் இன்று கடவுச்சீட்டுக்காக வரிசையில் நிற்கும் காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது ஆண்டு விழாவில் இணைந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.