நான் எவருக்கு எதிராகவும் எவ்வித முறைப்பாடுகளைச் செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை – எம்.ஏ சுமந்திரன்

நான் எவருக்கு எதிராகவும் எவ்வித முறைப்பாடுகளைச் செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை – எம்.ஏ சுமந்திரன்

தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

தனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதன் ஊடாக தனக்கு எதிரானவர்கள் செயற்படலாம் என்ற சமிக்ஞையை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளதா எனவும் கேள்வி அவர் எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

10 முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து ஜனநாயக ரீதியில் போராடுவதற்கு எமக்கு உரிமையுள்ளது. இந்தப் போராட்டம் மக்கள் ஆதரவுடன் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு அரசாங்கம் பதிலளிக்கும் என நம்புகின்றோம்.

இந்தப் போராட்டம் நிறைவுபெற்றதன் பின்னர் என்னுடைய பாதுகபாப்பிற்கு நியமிக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் நான் எவருக்கு எதிராகவும் நான் எவ்வித முறைப்பாடுகளைச் செய்து விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொள்ளவில்லை.

என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கமே சில விடயங்களை செய்தது. பல வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு என்னுடைய ஆலோசனைகளோ, முறைப்பாடுகளோ இன்றி பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடு ஏன் அகற்றப்பட்டது.

இதில் மூன்று விடயங்கள் காணப்படுகின்றன. ஒன்று அரசாங்கம் அவர்கள் என்னுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் எரிச்சலைடைந்துள்ளது. இது உண்மையல்லவெனின் அப்பாவிகளை அரசாங்கம் தேவைற்ற வகையில் சிறையில் தடுத்து வைத்துள்ளது. அல்லாவிடின் அவர்களை செயற்படுமாறு அரசாங்கம் சமிக்ஞையை கொடுக்கிறது.

ஆகவே எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கம் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *