நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர்

நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர்

நியூசிலாந்தின் ஒக்லாந்து புறநகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டவர் இலங்கை காத்தான்குடியைச் சேர்ந்த 31 வயதுடைய முகமது சம்சூதீன் ஆதில் என அரச புனலாய்வு துறையினர் அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.எனவே அவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணையில் கண்டறியப்பட்ட விடயங்கள் மேலதிக தகவல்கள் வருமாறு,

காத்தான்குடி கபூர் கடை வீதியைச் சேர்ந்த பாடசாலை அதிபரான சம்சூதீன் முகமது இஸ்மாயில் சரிதா தம்பதிகளுக்கு 1989 ம் ஆண்டு கடைசி மகனாக பிறந்தவர் முகமது சம்சூதீன் ஆதில் அவருக்கு சகோதரியும் 2 இரண்டு சகோதரன்களும் உள்ளனர் .ஆதில் ஆரம்ப கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் பயின்று வந்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட யுத்த காரணமாக 1998 ம் ஆண்டு ஆதிலுக்கு 8 வயதில் இருக்கும் போது அவரது குடும்பத்தினர் இடம்பெயர்ந்து கொழும்பு மொரட்டுவையில் வாழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதில் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் க.பொ. உயர்தரம் கல்வி கற்று 2006ம் ஆண்டு பரீட்சை எழுதிய பின்னர் 2011 ம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்று குடியேறியுள்ளார்.இவரின் தந்தையார் மாளிகாவத்தை அல் ஹிதாய பாடசாலையில் 2008 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை அந்த பாடசாலை அதிபராக கடமையாற்றி வந்த நிலையில் அவரது மகள் கனடாவில் குடியேறி வாழ்ந்துவருவதுடன் அவருடன் கனடாவிற்கு சென்று குடியேறி வாழ்ந்துவருகின்றார்.

அதேவேளை ஒரு சகோதரன்; கட்டாரில் திருமணம் முடித்து வாழ்ந்துவருதாகவும் அடுத்த சகோதரன் சவுதியில் இருப்பதாகவும் கொலன்னாவையில் சொந்த வீட்டை வாடகைக்கு தாயார் கொடுத்துவிட்டு தமது காத்தான்குடி கபூர் கடை வீதியிலுள்ள வீட்டில் வசித்துவருகின்றார்.இது தொடர்பாக அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்த பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *