தற்போது இருக்கும் நவீன உலகில் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகம் ஆகிவிட்டது. இதனால் ஐபோன் உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை கண்டுபிடிப்பது எளிது.
இருப்பினும், இன்னும் ஏராளமானோர் ஆன்லைன் போன்றவைகளில் ஐபோன் என்று வாங்கி அதன் பின் அது உண்மையான ஐபோன் தானா என்பது தெரியாமல் பயன்படுத்தி வருகின்றன. அதன் பின் நாட்கள் சென்ற பின் அது ஒரு போலியான ஐபோன் என்பது தெரியவருகிறது.
அப்படி இருப்பவர்களுக்கு போலி iPhone-ஐ எப்படி கண்டுபிடிப்பது என்பது பற்றி பார்ப்போம்.
- நீங்கள் ஐபோன் வாங்கியிருக்கிறீர்கள் என்றால், உடனடியாக அந்த ஐபோன் பாக்ஸை திறக்காமல், பாக்ஸில் இருக்கும் IMEI எண்ணை எடுத்து, https://checkcoverage.apple.com/in/en-ல் பதிவிட்டால், அது உண்மையான ஐபோன் தானான் என்பதை உங்களுக்கு தெரிவிக்கும்.
- ஆப்பிள் நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் Lightning port-ஐ பாதுகாக்க pentalobe திருகுகளை பயன்படுத்தும். அதாவது pentalobe screws, இது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், போன் ஒரு போலியான என்பதை அறியலாம்.
- ஐபோனைப் பொறுத்தவரை சார்ஜ் வசதியாக microUSB port அல்லது USB-C port தான் கொடுக்கப்பட்டிருக்கும். இதைத் தவிர Lightning cable பயன்படுத்தும் வகையில் இருந்தால், அது ஒரு போலியான ஐபோன்.
- ஒரு ஐபோனை நாம் முதல் முறையாக பயன்படுத்தும் போது, அதில் ஆப்பிள் ஐடி கணக்கை தான் பயன்படுத்த சொல்லும். அதைத் தவிர Google அல்லது பிற கணக்கைப் பார்க்கும்படி உங்களைத் தூண்டினால் அது ஒரு போலி ஐபோன். அதுமட்டுமின்றி, நீங்கள் வாங்கியிருக்கும் ஐபோனில் ஆப் ஸ்டோர் செல்லும் போது Apple App Store இருந்தால், அது உண்மையான போன், அதுவே Google Play Store அல்லது வேறு ஏதேனும் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரைப் பார்த்தால் அது போலியானது.
- இறுதியாக, நீங்கள் வைத்திருக்கும் ஐபோனின் power button-ஐ தொடர்ந்து அழுத்தி பிடியுங்கள். அப்போது Siri தோன்றினால், உங்கள் ஐபோன் உண்மையானது. அதற்கு பதிலாக கூகுள் அசிஸ்டண்ட், அமேசான் அலெக்சா அல்லது வேறு ஏதேனும் குரல் உதவி கேட்டால், அது போலியானது என்பதை உறுதி செய்யலாம்.