பங்களாதேஷிடமும் கடன்…

பங்களாதேஷிடமும் கடன்…

அந்நியச் செலாவணி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஸ்ரீலங்காவிற்கு உதவும் வகையில் பங்களாதேஷ் 250 மில்லியன் டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.

இந்தக் கடன் பணத்தின் ஒரு தொகுதி இந்த வாரமளவில் ஸ்ரீலங்காவிற்கு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நாணய மாற்று ஒப்பந்தத்தின் கீழ் பங்காளதேஷ் மத்திய வங்கி மற்றும் ஸ்ரீலங்கா மத்திய வங்கி ஆகியவற்றிற்கு இடையில் ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதன்கீழ் மூன்று கட்டமாக வழங்கப்படும் கடன் தொகையின் முதல் தொகுதி இந்த வாரம் வழங்கப்படவுள்ளது.

இந்தக் கடன் தொகையை ஸ்ரீலங்கா அரசாங்கம் குறித்த திகதிக்குள் திருப்பிக் கொடுக்கத் தவறும் பட்சத்தில் மூன்று மாதங்கள் மேலதிகமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த காலத்தினுள்ளும் திருப்பிச் செலுத்தாத பட்சத்தின் மேலும் மேலதிகமாக மூன்று மாதங்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சார்க் வலயமைப்பில் உள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் சர்வதேச வழிமுறையை பின்பற்றி, பங்களாதேஷ், இந்த கடன்தொகையை வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் ஸ்ரீலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்களாதேஷ் விஜயத்தின் போது நாணய மாற்று உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை பங்களாதேஷிடம் வரலாற்றில் முதல் தடவையாக, கடன் பெறும் நாடாக ஸ்ரீலங்கா பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *