பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
அப்படி படகுகள் வாயிலாக சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோருக்கு அங்கு என்ன நடக்கும்?
பிரித்தானியாவில் கால் பதிக்கும் புலம்பெயர்வோரானாலும் சரி, கடல் பரப்பில் அதிகாரிகளிடம் சிக்குபவர்களானாலும் சரி, அவர்கள் முதலில் எல்லை பாதுகாப்புப்படையின் பரிசீலனை மையத்துக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.
அங்கு வைத்து அவர்களுக்கு மருத்துவ உதவி ஏதாவது தேவைப்படுகிறதா என சோதிக்கப்பட்டு, அவர்களுக்கு உணவளிக்கப்படுவதுடன், அவர்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களா என சோதிக்கப்படுவார்கள்.
வயதுவந்தவர்கள், ஒரு நேர்காணலுக்குப் பின், பிரித்தானியாவிலுள்ள ஒரு தங்கும் மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள்.
உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக, அவர்களுக்கு வாரம் ஒன்றிற்கு 37.75 பவுண்டுகள் வழங்கப்படும். அவர்களது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை புலம்பெயர்வோர் அங்கு காத்திருக்கவேண்டும். புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், தாங்கள் எந்த நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்தார்களோ, அதே நாட்டிற்கு அவர்கள் நாடு கடத்தப்படலாம்.
உடன் பெரியவர்கள் யாரும் இல்லாத குழந்தைகளை Kent County Council தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளும். அத்துடன் சில உள்ளூர் அமைப்புகளும் இத்திட்டத்தில் உதவுவார்கள்.
தற்போது, இந்த திட்டத்தை மாற்றித்தான், அல்பேனியா போன்ற ஒரு நாட்டிற்கு புலம்பெயர்வோரை அனுப்பி வைக்க பிரித்தானிய அமைச்சர்கள் திட்டமிட்டுவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.