படகு கவிழந்து நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்

படகு கவிழந்து நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரிழ் மூழ்கி மரணம்

துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர் காணாமல்போயிருந்தனர். இவர்களில்
நான்கு கர்ப்பிணிப்பெண்களின் உடல்களையும் மேலும் 16 பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வியாழக்கிழமை படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த 20 பேரி;ல் 19 பேர் பெண்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் துனிசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மீனவர்கள் நான்கு உடல்களை மீட்டுக்கொண்டுவந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
37 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த மோசமான நிலையில் காணப்பட்ட படகே கவிழ்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோர்கி என்ற நாடொன்றை சேர்ந்தவர்களே அதிகளவில் படகில் காணப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

13 பேரை தேடிவருவதாகவும் அவர்களின் உடல்கள் கிடைக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆட்களை கடத்திச்செல்லும் பல படகுகளை சமீபநாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் துனிசிய அதிகாரிகள் எனினும் ஆள்கடத்தலில் ஈடுபடும் படகுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
லிபியாவிலிருந்தும் துனிசிய கடற்பரப்பிலிருந்தும் குடியேற்றவாசிகளை ஏற்றிக்கொண்டு பல படகுகள் புறப்படுகின்றன. வறுமை மக்கள் இவ்வாறு ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதற்கான முக்கிய காரணமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *