ஒரு நாடு ஒரு சட்டம் செயலணிக்கு தலைவராக ஞானசார தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே தனது பதவியை இராஜினாமா செய்ய முன்வந்துள்ளமையை நீதியமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) உறுதி செய்துள்ளார்.
இதன்போது தனது இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி (Gotabaya Rajapaksa) ஏற்க மறுத்துவிட்டார் எனவும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி குறிப்பிட்ட செயலணி உருவாக்கப்பட்டமைக்கான நோக்கங்களை தெரிவித்ததாகவும், சட்டங்களை இயற்றுவதற்காக அந்த செயலணியை உருவாக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பதவி விலகும் விவகாரம் இன்னமும் முட்டுக்கட்டை நிலையிலேயே உள்ளதாகவும்,அவ்வாறானதொரு செயலணியை உருவாக்குவதற்கு அரசமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.