பதவி விலகும் நேரத்தில் சொந்தக் கட்சியினரே ட்ரம்புக்கு கொடுத்த அதிர்ச்சி

பதவி விலகும் நேரத்தில் சொந்தக் கட்சியினரே ட்ரம்புக்கு கொடுத்த அதிர்ச்சி

ஜனாதிபதியாக பதவி வகித்த நான்கு ஆண்டுகளில், முதன்முதலாக, டிரம்பின் வீட்டோ அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிராகரித்து, இராணுவ கொள்முதல் கொள்கையை நிறைவேற்றி உள்ளது.

ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், 740 பில்லியன் டொலர் மதிப்பிலான இந்த கொள்முதல் கொள்கையை வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதை அடுத்து புத்தாண்டு தினத்தில் கூடிய நாடாளுமன்றத்தில், அவரது குடியரசு கட்சி பெரும்பான்மையாக இருக்கும் செனட் உறுப்பினர்களே கொள்முதல் கொள்கைக்கு ஆதரவாக வாக்களித்து டிரம்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனால் கடும் விரக்தி அடைந்துள்ள டிரம்ப் தமது கட்சி தலைவர்களும் எம்பிக்களும் பலவீனமானர்கள் என டுவிட் செய்து தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *