பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் கியுபா ?

பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் கியுபா ?

பயங்கரவாதத்திற்கு அனுசரணை வழங்கும் நாடுகளின் பட்டியலில் கியுபாவை சேர்க்கப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இதனை அறிவித்துள்ளார்.
தலைமறைவாகியுள்ள அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் கொலம்பிய கிளர்;ச்சிக்காரர்களிற்கு அடைக்கலமளித்ததன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு கியுபா தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது என்பதனால் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கவுள்ளதாக மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

கியுபா வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரவிற்கு  ஆதரவளித்ததன் காரணமாக அவரால் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முடிகின்றது என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ இதன் மூலம் வெனிசூலாவிற்குள் சர்வதேச பயங்கரவாதிகள் வாழவும் வளரவும் முடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.எமது இந்த நடவடிக்கை மூலம் நாங்கள் மீண்டும் கியுபா அரசாங்கத்தை பொறுப்புக்கூறச்செய்வோம் என தெரிவித்துள்ள மைக்பொம்பியோ கஸ்டிரோ அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதையும் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகளையும்  நிறுத்தவேண்டும் என்ற தெளிவான செய்தியையும் தெரிவிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.டிரம்பின் இந்த நடவடிக்கை கியுபாவுடனான உறவுகளை ஒபாமா காலத்திற்கு கொண்டு செல்வதற்கான பைடனின் முயற்சிகளை கடினமானதாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2015 இல் கியுபாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஒபாமா நீக்கியிருந்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *