பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உள்ள சில விதிகளைத் திருத்துவதற்கு அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும், இது குறித்து ஆராய அமைச்சரவை துணைக்குழுவை நியமித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு செயற்பாட்டாளர்கள் குழுவுடன் வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்பாக சர்வதேச அளவில் பல்வேறு தவறான கருத்துக்கள் பரவி வருவதாகவும், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் சர்வதேச அரங்கில் எழுந்துள்ள இன நல்லிணக்க பிரச்சினைகள் ஆகியவற்றைக் கையாள்வதில் இலங்கை அரசு வெளிப்படையாகவும் உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார். .