பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் கண்டிக்கப்பட்ட மிகவும் ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி கடுமையாக கண்டிக்கின்றது என அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பதிவில்,இந்த கைது இடம்பெற்ற விதம் – பொலிஸ் ஆட்சியிலுள்ள கட்சியின் ஒரு பகுதியாக இயங்கும் நாட்டில் இடம்பெறும் அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலான கைதுகளை போன்றே இது இடம்பெற்றது என்பதனை வெளிப்படுத்தும் அனைத்து வழிமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற அடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீதிஒருபோதும் வழங்கப்படாது என்பதை தயக்கமின்றி தெரிவிக்க முடியும்.
மாறாக நாடு அநீதியின் பாராம்பரியங்களுடன் விடப்படும்.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகள் மற்றும் நீதிநடவடிக்கைகள் குறித்த அனுபவங்கள் ஆதாரங்கள் அற்ற நபர்களை தண்டிப்பதற்கான கருவியாக அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.