பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என்ற வேண்டுகோள்களை ஏற்கவில்லை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் ஆணைக்குழு மூன்று பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.மூன்றுமாதங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.தற்போது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாமலே தடுப்புக்காவல் உத்தரவை நீடிப்பதற்கான அதிகாரம் பாதுகாப்பு செயலாளருக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.மூன்று மாதங்களிற்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விசேட பாதுகாப்புடன் அவர்களின் வீடுகள் அல்லது அவர்களின் பகுதிகளிற்குள் தடுத்துவைக்கும் விதத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.