பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் -சரத்வீரசேகர

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் -சரத்வீரசேகர

நாட்டிலிருந்து பயங்கரவாதமும் தீவிரவாதமும் இல்லாமல் போகின்ற வரை பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்நதும் நீடிப்பது அவசியம் என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரவாத பயங்கரவாத சக்திகள் காணப்படுகின்ற வரையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும் என்பதே எனது கருத்து என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் கைதுகள் இடம்பெறுகின்றன என தெரிவித்துள்ள அமைச்சர் சரத்வீரசேகர பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினால் தடுப்பில் உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்கள் காணப்படும் வரை பயங்கரவாத தடைச்சட்டம் நீடிக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போதும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் காணப்படுகின்றதால் இதன் காரணமாக அவ்வறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை விசாரணை செய்வதற்கான சட்டங்கள் அவசியம் இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உகந்த விடயம் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றும் நடவடிக்கைகள் இடம்பெறாது என தெரிவித்துள்ள அமைச்சர் பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கு இணங்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவை ஏற்கனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுமாறு தெரிவிக்கின்றது ஆனால் அவர்கள் பயங்கரவாதத்தை தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக இங்கு வரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

அவர்கள் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக என்ன உதவியை வழங்குகின்றனர் பயங்கரவாதம் தீவிரவாதத்தினால நெருக்கடிகனை அனுபவிக்கின்றவர்கள் நாங்கள் என்பதால் நாங்களே தீர்மானிக்கவேண்டும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *