இன்று நாம் பருந்து, வெளவால், தேன் வண்டு ஆகிய இவ்வுயிரினங்களை சோதித்துப் பார்ப்போம். முதலில் பருந்து ஒன்றைப் பிடித்து 6 அடி அகலம் 8 அடி நீளமானதும் மேற் பக்கம் திறந்திருக்கிறதுமான ஒரு அறையில் விட்டால் அது என்ன செய்யும் தெரியுமா? அது அழும், கவலைப்படும், எப்படி வேண்டுமெண்றாலும் நீங்கள் சொல்லலாம் ஆனால் அது அந்த இடத்தை விட்டு ஒருபோதும் வெளியில் பறந்து போகாது. ஏனென்றால் அவை மேலெளும்பிப் பறப்பதற்கு முன் குறைந்தது 10 அடி தொடக்கம் 12 அடி வரை ஓடினால்தான் அவற்றால் பறக்கமுடியும், இல்லையென்றால் அன்றிலிருந்து அது சிறைச்சாலைதான். யாரும் வெளியில் எடுத்துவிட்டால்தான் வெளியுலக வாழ்க்கை. ஆகாய விமானங்கள் போன்று இவற்றுக்கும் ஓடுபாதை (Run way) தேவை.
வெளவாலைப் பிடித்து எந்த ஒரு சம வெளியிலோஅல்லது ஒரு தளத்திலோ விட்டால் அது என்ன செய்யும் தெரியுமா? அதுவும் மேல் எழும்பிப் பறக்காது, அங்கும் இங்குமாக அரக்கித் திரியும், சரிவான ஒரு தளம் கிடைத்தால் மட்டுமே அவற்றால் நழுவி எழும்பிப் பறக்க முடியும். கிளைடர் (Gliders) போன்ற உபகரணங்களை மலை உச்சியில் அல்லது உயரமான இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து விழுந்து மனிதர்கள் பறப்பது போலவே இவற்றால் சரிவான தளம் கிடைத்தால்மட்டும் பறக்க முடியும்.
மூன்றாவதாக நாம் ஒரு தேன்-வண்டைப் பிடித்து தேனீரருந்தும் கண்ணாடிக் குவளையினுள் ( Glass tumbler) வைத்தால் என்ன நடக்கும் என்று தெரியுமா? மேற்பக்கம் திறந்திருந்த போதிலும் தேன் வண்டு ஒருபோதும் வெளியில் பறந்து போகாது. அடி மட்டத்திலேயே நின்று பக்கக் கண்ணாடிச் சுவரை துளைத்துக்கொண்டு வெளிவர சாகும்வரை முயற்சி செய்து இறுதியில் இறந்துவிடும். இதைப் பார்க்கும்போது எமது சிறிலங்கா அரசாங்கமும் அரசியல் தமிழ்த் தரப்பும்தான் எமக்கு ஞாபகம் வருகிறது. கண்ணாடிக் குவளை இலங்கை அரசாங்கம் தமிழ்த் அரசியல்தரப்பு ஒரு தேன் வண்டு. சிறிலங்கா அரசோடு பேசித் தீர்க்கலாம் என்பது, தமிழ் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த இந்தத் தேன் தேடும் வண்டுகளின் நினைப்பு.