ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அவசரமாக அமெரிக்கா சென்றுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கொவிட் தடுப்புக்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியினால் பஷில் ராஜபக்ஸவிற்கு கையளிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.எனினும் சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக பஷில் ராஜபக்ஸ, அமெரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததார்.
கடந்த செப்ரெம்பர் மாதமும் அதேபோல கடந்த ஏப்ரல் மாதத்திலும் பஸில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பயணத்தை இரத்து செய்திருந்ததாக கூறப்படுகின்றது.இந்த நிலையில் இன்று புதன்கிமை அமெரிக்காவுக்குச் சென்றுள்ள பஷில் ராஜபக்ஷ, ஒருமாதம் வரை அங்கு தங்கியிருக்கவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.