பாராளுமன்றம் நேற்றையதினம் முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பு மனுக்கள் சமர்ப்பணம் மற்றும் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் திருப்பணிகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமான போதும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு உரத்த வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தும் வகையில் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதன் போது ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றன இதனால் சபையில் அரைமணி நேரமாக கூச்சல் குழப்பம் ஏற்பட்டது இவ்வேளையில் அமைதியாக ஆசனங்களில் அமருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சபாநாயகர் அடிக்கடி கேட்டுக் கொண்ட போதும் சபாநாயகரின் அறிவித்தலையும் மீறி தொடர்ந்தும் எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.