பிரபல மல்யுத்த வீரர் ஜொனாதன் ஹூபர் காலமானார்!

பிரபல மல்யுத்த வீரர் ஜொனாதன் ஹூபர் காலமானார்!

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்தப் போட்டியும் அடங்கும்.

இவ் விளையாட்டிலுள்ள பிரபலமான வீரர்களில் ஜொனாதன் ஹூபர் (Jonathan Huber )ஒருவர். இவர் ’வயட் பெம்லி’ என்ற பெயருடைய குழுவுடன் இணைந்து மல்யுத்தத்தில் பங்கேற்றுவந்தார். பின்னர் அந்த குழுவில் இணையாமல் தனியாகவே போட்டிகளில் பங்கேற்று வந்தார்.

41 வயதான  இவர் மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவர் 2019 ஆம் ஆண்டு டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்த விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த ஹூபர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இத் தகவலை அவரது மனைவி அமேண்டா உறுதிபடுத்தியுள்ளார். ஹூபரின்  மறைவுக்கு டபுள்யூ டபுள்யூ இ மல்யுத்த வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

editor

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *