பிரான்சில் 40 வயது மதிக்கத்தக்கவர்களும் மூன்றாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசி போடப்பட்டுவிட்டு, எதிர்ப்பு சக்திக்காகவும், கொரோனாவில் இருந்து தப்பிப்பதற்காகவும் மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன் படி, பிரான்சில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது 40 வயது மதிக்கத்தக்கவர்களும் போட்டுக் கொள்ளலாம் என்று மருத்துவதுறை கூறியுள்ளது.
வரும் டிசம்பர் 1-ஆம் திகதி முதல் 50 வயது மதிக்கத்தக்கவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி போடப்படும் என்ற அரசு முடிவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த வயது வரம்பை 40 ஆக குறைக்கலாம் என HAS (Haute autorité de santé) கூறியுள்ளது.
இது குறித்து HAS வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமீபகாலமாக மேற்கொண்ட ஆய்வுகளில் 40 வயது மதிப்புத்தக்கவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி நல்ல பலனை கொடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.