உலக அளவில் திடீரென மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரான்ஸில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது.
இதேவேளை, பிரான்ஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 79 ஆயிரத்து 807 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரான்ஸில் 93 இலட்சத்து 26 ஆயிரத்து 258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 23 ஆயிரத்து 188 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரான்ஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 12 இலட்சத்து 77 ஆயிரத்து 37 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3,333 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 61,084 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 79 இலட்சத்து 26 ஆயிரத்து 33 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்