பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தந்தை ஸ்டன்லி ஜோன்சன், பிரான்ஸ் நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதில் விருப்பம் இல்லாத 80 வயதான ஸ்டன்லி ஜோன்சன், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியுள்ள நிலையில், இந்த முடிவினை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இது பிரான்ஸ் குடிமகனாவதற்காக செய்யப்பட்டது அல்ல. இது ஏற்கனவே நாம் யார் என்பதை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை.
எனது தாய் பிரான்ஸில் பிறந்தவர். நான் எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்தவன் தான்’ என கூறினார்.
பழமைவாத கட்சியை சேர்ந்த ஸ்டன்லி ஜோன்சன், கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்கெடுப்பிலும் பிரேக்ஸிட்டுக்கு எதிராகவே வாக்களித்திருந்தார்.