பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் புலம்பெயர்ந்தோருக்கு கடுமையான சிறைதண்டனை விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் உயிரிழப்புக்கள் கடந்த காலங்களில் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தவே பிரித்தானியாவில் சட்டவிரோதமாக நுழையும் புலம் பெயர்ந்தோருக்கும் கடுமையான சிறைதண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலில்,
சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவிற்கு வர விரும்பும் புலம்பெயர்ந்தோர் கடுமையான தண்டனைகளை எதிர் கொள்ள நேரிடும். புதிய தேசிய அமலாக்க விதிகளின் படி, சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைவது ஒரு கிரிமினல் குற்றமாக மாற்றப்படவுள்ளது. இதற்கு முதலில் ஆறு மாத சிறை தண்டனையாக இருந்தது தற்போது அது நான்கு ஆண்டுகள் வரை உயரும்.
இது குறித்து உள்துறை அமைச்சர் பிரதி பட்டேல் கூறுகையில்,
பிரித்தானியாவின் தேசிய மற்றும் எல்லைகள் மசோதாவில் புகலிடம் முறையை சரிசெய்ய முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. குடியேற்றத்திற்கான எங்களின் இந்த புதிய திட்டம் நியாயமானது, அது உறுதியானது. பாதுகாப்பான சட்ட வழிகள் மூலம் மக்களை நாங்கள் வரவேற்க தயாராக இருக்கிறோம். அதே வேளை சட்டவிரோதமாக நுழைய முயன்றால், இந்த புதிய திட்டம் அந்த குற்றங்களை தடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.