பிரித்தானியாவில் ஒரே நாளில் புதிதாக 101பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந் நாட்டு சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (07) இவ்வாறு 101 பேர் புதிதாக Omicron தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் திங்கட்கிழமை அன்று (06) பிரித்தானியாவில் 90 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறிப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிர்த்தானியாவில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த Omicron தொற்றாளர்களின் எண்ணிக்கை 437 ஆக உயர்வடைந்துள்ளது.
அண்மையில் தொற்றுகள் இங்கிலாந்து (72), ஸ்கொட்லாந்து (28) மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.