பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், சிங்கப்பூருக்கும் பரவியது

பிரித்தானியாவில் பரவிவரும் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ், சிங்கப்பூருக்கும் பரவியது

பிரித்தானியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது  பரவி வருகிறது.  இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முன்பு இருந்த கொரோனா வைரஸைவிட இது 70 % அதிகம் பரவக்கூடியது  என்று கூறுகின்றனர்.

இதனால் பல்வேறு நாடுகள் பிரித்தானியாவுடனான விமான சேவையை இரத்து செய்துள்ளது. இந் நிலையில் பிரித்தானியாவிலிருந்து சிங்கப்பூருக்கும் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் B-117 பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து  சிங்கப்பூர் திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய புதிய வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து மாணவியுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் நடத்தப்பட்ட சோதனையில் உருமாறிய புதிய வகை கொரோனா B-117 இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்களில் மேலும் 11 பேருக்கு உருமாறிய புதிய வகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *