உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிரேசில் 3-வது இடத்திலும் உள்ளன.பிரேசில் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் மொத்தம் 2,843 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4.01 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே நேரம் புதிதாக 66 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பிரேசிலில் தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.46 கோடியை நெருங்க உள்ளது.கொரோனாவில் இருந்து 1.30 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர் என்றும், 10.91 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.