பிள்ளையானுக்கு பிணை

பிள்ளையானுக்கு பிணை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவருக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம், இராணுவப்புலனாய்வு உத்தியோகத்தரான எம்.கலீல் மற்றும் வினோத் என ழைக்கப்படும் முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக சட்டத்தரணி மங்களேஸ்வரி சங்கர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவருக்கு தலா 1லட்சம் ரூபா சரீரப் பிணையிலும் தலா 2 சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *