ஈரான் தனது அணுசக்தி தளங்களை ஆய்வு செய்வதை நிறுத்தவும், அதன் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் யுரேனியம் செறிவூட்டலை அதிகரிக்கவும் ஈரான் தீர்மானித்துள்ளது.
இந்த சட்டமூலம் யுரேனியத்தை செறிவூட்டுவதை 20 சதவீதமாக மீண்டும் தொடங்க வேண்டும். இது 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 3.67 சதவீதத்துக்கும் மேலானது.
ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மோசென் ஃபக்ரிஸாதே இலக்கு வைக்கப்பட்ட பின்னர் இது வருகிறது.
இன்னும் மூன்று மாதங்களுக்குள் தங்கள் மீதான அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை மற்ற வல்லரசு நாடுகள் மேற்கொள்ளாவிட்டால், தங்களது அணு மையங்களில் சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை இரத்து செய்ய வகை செய்யும் சட்டமூலத்தை ஈரான் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியது.
வல்லரசு நாடுகளுடன் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக யுரேனியம் எரிபொருளை 20 சதவீதம் வரை செறிவூட்டவும் அந்த சட்டமூலம் அனுமதித்தது. அந்த சட்டமூலத்தை, ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி நேற்று (புதன்கிழமை) நிராகரித்தார்.
அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாக்கவும் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்காகவும் ராஜீயரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த முயற்சிகளுக்கு இதுபோன்ற சட்டமூலங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை நிராகரிப்பதாக ரௌஹானி தெரிவித்தார்.