சியோமி நிறுவனம் புதிய லோகோவை அறிமுகம் செய்தது. புதிய லோகோ உயிரோட்டத்தை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது பிரீமியம் சந்தையில் சியோமியின் கால்தடத்தை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும், பிராண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.புதிய லோகோவை உலக புகழ்பெற்ற வடிவமைப்பாளர் கென்யா ஹாரா வடிவமைத்து இருக்கிறார். புது லோகோ முந்தைய லோகோவை போன்றே ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கிறது. இதே லோகோ பிளாக் மற்றும் சில்வர நிறங்கள் உயர் ரக சாதனங்களுக்கு பயன்படுத்தப்படும் என சியோமி தெரிவித்து உள்ளது.
லோகோ அறிமுகம் செய்ததுடன், சியோமி நிறுவனம் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்தில் களமிறங்க இருப்பதாக தெரிவித்து உள்ளது. இதற்கென சியோமி நிறுவனம் முதற்கட்டமாக 10 பில்லியன் யுவான்களை முதலீடு செய்ய இருக்கிறது. இதுதவிர அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறது.சியோமியின் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் வாகன வியாபாரத்திற்கான தலைமை செயல் அதிகாரியாக சியோமி தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜூன் பொருப்பேற்கிறார்.