புத்தளம் நகரசபையில் உள்ள குப்பைமேட்டில் திடீரென தீப்பற்றி வேகமாக பரவி வருகிறதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று நண்பகல் 12 மணியளவில் புத்தளம் – மணல்குன்று பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர புத்தளம் நகரசபை, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், கடற்படையினர், இராணுவத்தினர் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.